"குப்பைக் குவியலில் கிடந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்கள் "
இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் 52 விடைத்தாள்கள் குப்பைக் குவியலில் இருந்து பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் இந்த விடைத்தாள்களானது ஒரு பேப்பர் பார்சலில் போடப்பட்டு, விடைத்தாள்கள் மதிப்பீட்டின் முடிவில் தூக்கி எறியப்பட்டு குப்பையாக வீசப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பரீட்சை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி