"21 வயதில் பட்டதாரி பட்டமும் .........புதிய கல்விச் சீர்திருத்தமும்"
நாடாளுமன்றத்தில் நேற்று (05.12.2023) கல்வி அமைச்சு தொடர்பான விவாதத்தில்அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கலந்துகொண்டு உரையாற்றும் போது,
நாட்டின் பாடசாலை மாணவர்கள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப்பெற உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிககையில்,
புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இந்நாட்டு மாணவர்கள் 21 வயதிற்குள் பல்கலைக்கழக பட்டம் பெறும் வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்நாட்டின் பிள்ளைகள் 18 வயதில் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி