2024ல் கல்வித்துறையில் ஏற்பட உள்ள மாற்றங்கள்
1-5 , 6-9 , 10-13 1ஆம் தரங்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும்.
மேலும், மாணவர்கள் 21 வயதுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் வகையில் பாடசாலைப் பரீட்சைகள் நடத்தப்படும் தரங்களை மீள்திருத்தம் செய்யவுள்ளதுடன், 10 ஆம் தரத்தில் சாதாரண தரப் பரீட்சை மற்றும் 12 ஆம் தரத்தில் உயர்தரப் பரீட்சையை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
மேலும், எதிர்வரும் வருடத்தில் பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 2,535 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 03 முதல் 05 வரையான வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைப் பருவ வளர்ச்சிக்கான சிறப்பு வேலைத்திட்டமொன்றை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் UNICEF ஆகியவற்றுடன் இணைந்து செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் கல்வியியலாளர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் ஆசிரியர் வெற்றிடங்கள் உட்பட கல்வி சேவையில் நிலவும் அனைத்து வெற்றிடங்களையும் அடுத்த வருடம் பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நிரப்புவதற்கு அவசியமான பணிகளை முன்னெடுத்துள்ளோம்”என கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி