"ஜனவரி முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000"
அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இம்மாதம் பாடசாலை விடுமுறை முடிந்து பெப்ரவரி 2 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும் புத்தாண்டு தொடர்பான பாடசாலை தவணை பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை, ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி