"பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகள்"
எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.
இன்று நாடாளுமன்ற கேள்வி பதில் நேர உரையில் கருத்துத் தெரிவிக்கையில்;“எதிர்வரும் நான்காம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்கு காலணிக்கான வவுச்சர் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகி 27ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது.
ஏழு இலட்சத்து நாற்பது ஆயிரம் மாணவர்களுக்கு இவ்வாறு காலணிகள் வழங்கப்படவுள்ளன.
பின்தங்கிய, கடுமையாக பின்தங்கிய, தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களில் இருந்து இந்நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது”.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி