Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவும் வைரஸ்

"பாடசாலை மாணவர்கள்  மத்தியில் பரவும் வைரஸ் " 



 

 சிறுவர்கள் மத்தியில் கை, கால் மற்றும் வாய் நோய் (hand, foot and mouth disease (HFMD)) பரவி வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


மேலும், சிறுவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகக் கவசங்களை அணிவிக்குமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


கைகள், கால்கள் வாயைச்சுற்றியும், வாய்குள்ளும் சிகப்பு நிற கொப்பளங்கள் காணக்கூடியதாக இருக்கும். மேலும், கொப்பளங்கள் ஒரு குழுவாகக் காணப்படும். இவை அரிப்பை ஏற்படுத்தாது. 


இந்த வகை தொற்று நோய் பொதுவாக  காக்ஸ்சாக்கி வைரஸால் பரவுகிறது.  குறிப்பாக கொப்புளங்களுக்குள் இருக்கும் திரவம், தும்மல், இருமல் ஆகியவற்றால் பரவுகிறது. நோய் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து சில வாரங்களுக்குப் பிறகு இந்த வைரஸ் அவர்களின் மலத்திலும் காணப்படும்.

இந்த நோய் அறிகுறிகள் தங்களது பிள்ளைகளுக்கு காணப்படுமாயின் தங்களது பிள்ளைகளை பாடசாலைக்கு அல்லது அரசாங்க நிறுவனங்களுக்கு அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close