Ticker

6/recent/ticker-posts

Ad Code

சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு தொடர்ந்து விடுமுறை





மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் ஆகியோர் தலைமையில் இன்று (07) இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்படுமென மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


நிலவும் மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் கடந்த 5 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

close