Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாணவர்களிடையே பரவும்புதிய நோய்


கொழும்பு பாடசாலை மாணவர்களிடையே கண் நோய் வேகமாக பரவி வருவதாக வலயக் கல்வி அலுவலகம் எச்சரித்துள்ளது.

கொழும்பு பிராந்திய பணிப்பாளர் பி.ஆர். தேவபந்து,  அனைத்து  பாடசாலை அதிபர்களுக்கும்  இது தொடர்பில் அறிவித்துள்ளதுடன்  கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் உடனடியாக  மருத்துவ அதிகாரிக்கு  தகவல் தெரிவித்து பரிந்துரைகளை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பாடசாலைகளில்  கண் நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இருந்தால் அவர்களை மற்ற மாணவர்களிடமிருந்து வேறாக்கி  தனித்தனியாக வைக்க வேண்டும் என்றும்  வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை  பகுதி பாடசாலை ஒன்றைச் சேர்ந்த  ஆறு மாணவர்கள் கண் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

close