Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்




*மேஷம்

ஆரோக்கியக் குறைவு, மனக் குழப்பத்தால் கவலைகள் அதிகரித்தல், பண வரவின்மையால் குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை. அனைவரும் ஒரு சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் கருத்து வேறுபாடு ஏற்படும்.


ரிஷபம்

காரிய வெற்றிகள், அதிக தனலாபம், எதிர்பாலருடன் நட்பு, கற்பனை வளம் பெருகும். வீட்டில் நடக்கும் விழாக்கள் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். எல்லா வளமும் பெருகும்.


மிதுனம்

சுமாரான இலாபங்கள் ஏற்படுவதோடு மன இறுக்கம் ஏற்படும். கௌரவக் குறைவு, எடுத்துக் கொண்ட காரியங்களில் தடைகள், தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் ஏற்படலாம்.


கடகம்

உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் ஆதாயங்கள் அதிகரிக்கும். நல்ல உணவு, படுக்கை சுகங்கள், ஆடை அணிகலன்கள், நல்ல அதிர்ஷ்டம் ஆகியவை ஏற்படும்.


சிம்மம்

தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள், பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.


கன்னி

இன்று, பல முகாந்திரங்களிலும் பணவரவு அதிகரிக்கும். திருமணம், நண்பர்களின் சந்திப்பு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உறுதி.


துலாம்

சுக, சௌக்கியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். அதிகார பதவிகள் தேடிவரும். அன்பளிப்புகளும், பரிசுகளும் வீடு தேடிவரும்.


தனுசு

தொல்லை தரும் நிகழ்வுகள் ஏற்படலாம். மனக் குழப்பங்கள், அக்கம் பக்கத்தினரிடம் தேவையற்ற சண்டைகள். வீண் கோபத்தால் வீட்டிலுள்ளவர்கள் மேல் எரிந்து விழுதல் ஆகியவை ஏற்படும்.


விருச்சிகம்

தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை கூடும். மனம் மகிழும். மனைவி கருத்தரிக்கும் வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புகழ் ஓங்கும்.


மகரம்

இன்று, தேவைக்குப் போதுமான அளவு நல்ல வருமானம் ஏற்படும். உறவுகளைச் சந்திப்பின் மூலம் சந்தோஷத்தின் உச்சநிலையை அடைவார்கள். அவர்களுடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு ஏற்படும்.


கும்பம்

மகிழ்ச்சிகரமான வாழ்க்கை, நண்பர்களால் நன்மை, விரும்பிய அனைத்தும் விரும்பியபடி கிடைக்கும். இலாபம் ஆகியவை ஏற்படும். வீடு, வாகனம் மற்றும் சொத்துக்களால் ஆதாயம் உண்டு.


மீனம்

வீட்டுச் செலவுகள் எகிறும். பயணங்கள் மற்றும் செயல்பாடுகள் தடை, தாமதங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுதல் அரிது. குழப்பங்களும், அஜீரணம் போன்ற வயிற்று உபாதைகள் எழும்.



Post a Comment

0 Comments

Ad Code

close