"இன்றைய வானிலை அறிக்கை"
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வட மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அத்தோடு சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுவதுடன் 75 mm அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அம்மையும் தெரிவித்துள்ளது .
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக் கொள்ளுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி