Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய இராசி பலன்கள்

 இன்றைய இராசி பலன்கள்



 மேஷம்

உறவுகளிடையே முரண்பாடுகளைத் தவிர்க்க கோபத்தை அடக்கவும். மற்றவர்களிடம் பகை குறைய மனைவியை அடக்கி வைப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.


ரிஷபம்

நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். குடும்பத்தாரோடு செல்லும் உல்லாசமான சுற்றுலாப் பயணங்களால், ஆனந்தம் பெருகும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.


மிதுனம்

அரசு ஆதரவு, முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலை வாப்புக்கள் கூடிவரும். அதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.


சிம்மம்

சாதகமற்ற நிலையுள்ளதால் வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைப்பது அவசியம்.


கடகம்

உடன் பிறப்புக்களால் அதிக உதவி உண்டு. கோவில், குளப் பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.


கன்னி

காதல் விஷயங்களில் கன்னியரின், ஒத்துழைப்புக் கிடைக்கும். அவர்களுடன், அவுட்டிங்க் சென்று இனிமையாகப் பேசி மகிழ்வீர்கள். அதனால் படிப்பு விஷயங்களில் கோட்டைவிட நேரும்.


துலாம்

தாராளமாகத் தனவரவு அதிகரிக்கும். உடலைப் பேணிக் காப்பதால் ஆரோக்கியக் குறைபாடுகள் இருக்காது. பங்களா போன்று அழகிய தனிவீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நடக்கும்.


தனுசு

தாயின் மனம் கோணாமல் நடங்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. அன்னையின் ஆதரவால் துணிவுடன் செயல்களில் இறங்கி வெற்றி பெறுவீர்கள்.


விருச்சிகம்

கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.


மகரம்

உங்கள் திறமைகள் பிறரால் பாராட்டுப்படும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதலால் தனவரவு அதிகமாகும். மாணவர்களுக்கு அறிவுத்திறன் கூடி, கல்வியும் சிறக்கும்.


கும்பம்

எடுத்த காரியங்களில் எவ்விதத் தடைகள் ஏற்பட்டாலும், தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். செய்வதைச் சீராகச் செய்தால் வெற்றி உறுதி. துணிவுடன் செயல்களில் இறங்குங்கள்.


மீனம்

மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். மாணவர்கள் சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பேரும், புகழும் அடைவர். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்தால் தொழில் வளம் பெருகும்.

Post a Comment

0 Comments

Ad Code

close