Ticker

6/recent/ticker-posts

Ad Code

தமிழ் பாடசாலையினுள் வெடித்த மர்ம பொருள்

 


கம்பளை கல்வி வலய மாவத்துர, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாடாசாலை மைதானத்திலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் தெரியவருகையில், பாடசாலை நேரத்தில், மேற்படி மூன்று மாணவர்களும் வெளியே வந்த போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது.

 அதனை ஒருவர் உதைத்தைப்போது அந்த பொருள் திடீரென வெடித்துள்ளது.இதன்போது உதைத்த மாணவனின் பாதணி சேதமடைந்ததோடு அவரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது, .

விபத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

close