கொத்மலை வேத்தலாவ கிராமத்தில் பூமிக்கு கீழிருந்து மர்மமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இரவில் பூமிக்குள் இருந்து பல்வேறு மர்ம ஒலிகள் கேட்பதாக தெரிவித்துள்ளனர்
இதன் பின்னர் சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நுவரெலியா கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளை நியமித்து நாளை முழு விசாரணை நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி