மேஷம்
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
ரிஷபம்
புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.
மிதுனம்
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் குறையும். எதிர்பார்த்த வரவுகள் இருக்காது. பிறர் பகையால் உங்கள் முன்னேற்றம் கேள்விக் குறியாகும்.
கடகம்
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.
சிம்மம்
எதிர்பாராத வரவு வரும் அளவுக்கு இன்று ஓர் அதிக சக்தி கொண்ட அருமையான நாள். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பொருளாதார நிலையில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
ஆரோக்கிய நிலை மேம்படும். ஆயினும், வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.
துலாம்
செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
தனுசு
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
விருச்சிகம்
வீட்டில் பொருட்கள் களவு போகும் வாய்ப்பு உள்ளதால் விழிப்புடன் இருப்பது நல்லது. சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் எழலாம். கோபத்தால் அதிக குழப்பங்கள் ஏற்படும்.
மகரம்
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். மனைவி மூலம் நன்மை பல உண்டாகும்.
கும்பம்
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
மீனம்
வழக்கு விவகாரங்கள் தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகள் கட்டளைகளை மதித்து நடப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பந்து ஜனங்கள் பகைமை பாராட்டுவர்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி