"இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்"
மேஷம்
விவசாய வருமானங்கள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். நன்றாக வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வீடு, வாகனம் அமையும். இடமாற்றம் ஏற்படலாம்.
ரிஷபம்
ஆரோக்கியம் மேம்படும், மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவர். வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தனலாபம் உண்டு. பெண்களால் ஆதாயம் ஏற்படும்.
மிதுனம்
அதிக இலாபங்களால் வருமானம் கூடும். அனைவரின் நன்மதிப்பையும் பெறுவீர்கள். புத்திசாலித்தனமும், அழகும் கூடும். ஆயினும் கல்வியில் தடைகள் ஏற்படும்.
கடகம்
இன்று நிலையற்ற தன்மையோடு, அடிக்கடி மாற்றங்கள் நிகழும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். மணவாழ்வில் இன்பம் பெருகும். இனிய கனவுகள் வரும்.
சிம்மம்
மருத்துவமனை அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வருமானம் வரும். பண இழப்பு மற்றும் கௌரவக் குறைவுகள் ஏற்படும். கண்மூடித்தனமான காதல் ஏற்படும்.
கன்னி
நம்பத் தகுந்த நண்பர்களின் எண்ணிக்கை கூடினாலும், ஓரு சிலர் மட்டுமே நிலைத்திருப்பர். அரசியல் மற்றும் பொது வாழ்க்கை ஈடுபாட்டால் ஆதாயங்கள் பெருகும்.
துலாம்
இன்று, பொதுவாழ்க்கையால் வியாபாரம் அல்லது தொழில் மாற்றங்கள் ஏற்படும். தர்ம காரிய ஈடுபாட்டால் செல்வாக்கு அதிகரிக்கும். பெரியோரை மிகவும் மதிப்பீர்கள்.
தனுசு
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவு குறையும். சுகமும் குறையும்.
விருச்சிகம்
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், உற்சாகமும் பொங்கும். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும். குழந்தைகள் மீது அன்பு பெருகும்.
மகரம்
பொதுச் சேவையில் முழுவதுமாக ஈடுபடுவீர்கள். மனைவி மாற்றங்களையும், இனிய பயணங்களையும் விரும்பவார். திருமணம், தேன்நிலவு ஏற்படும்.
கும்பம்
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.
மீனம்
குழந்தைகளோடு குழந்தையாய் மகிழ்வீர்கள். இன்பத்தில், இசையில் இச்சை ஏற்படும். வியாபாரத்தால் ஏற்பட்ட கடன்களால் நெருக்கடி ஏற்படும்.படிப்பில் தடைகள் ஏற்படலாம்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி