Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய இராசி பலன்கள்

"இன்றைய இராசி பலன்கள்"



மேஷம்

தொழில் புரிவோர்க்கு வீண்செலவுகளும், பணமுடையும் தவிர்க்க முடியாதது. உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர்வழிகளில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும்.


ரிஷபம்

அரசு ஆதரவால் புதிய பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனி இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


மிதுனம்

எதிரபாராத விதமாகப் பெற்ற திடீர் பணவரவுகளால் மனம் பரவசப்படும். புதிய ஆடை ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.


கடகம்

புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அசைக்க முடியாத தெய்வ நம்பிக்கையால் நினைத்தெல்லாம், தடையின்றி நடக்கும். கருத்தரிப்பு அல்லது பிள்ளைப் பிறப்பு ஏற்படலாம்.


சிம்மம்

எதிலும் நியாயத்திற்குப் புறம்பாக நடக்கக் கூடாது. பெண்களின் ஒற்றுமை இன்மையால், உறவுகளில் விரிசல் ஏற்படலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் பெறலாம்.


கன்னி

இன்று, பணத்தைப் பற்றிய பிரச்சனைகள் ஏதுமின்றித் தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கிய மேம்பாட்டால் மருத்துவச் செலவுகள் இருக்காது. வாக்கு வன்மையால் பொருளாதார நிலை மேலும் உயரும்.


துலாம்

தொழில் மூலமாக தனவரவு கூடும். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் தானாகவே முன்வந்து உதவி செய்வர். பெயரும் புகழும் ஓங்கும். அரசு உதவியால் தொழில் சிறக்கும்.


தனுசு

இன்று உங்களுக்கு சுமாரான நாள். சுக சௌக்கியத்திற்கு பங்கம் விளையும். எதிர்பார்த்த இனங்களில் பணவரவு தாமதப்படும். அதனால், கைமாத்தாகப் பிறரிடம் கடன் வாங்க நேரும்.


விருச்சிகம்

வெளியூர்ப் பயணங்களில் கவனம் தேவை. குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுப் பெறாது.


மகரம்

இதுவரை இல்லாத அளவுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும், வாழ்க்கையில் புதிய உற்சாகம் பிறக்கும். மனையாளின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி தரும். நண்பர்கள் உதவி நன்மை பயக்கும்.


கும்பம்

எடுத்த காரியங்கள் தடைப்படுவது கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். துணிந்து செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க முயலுங்கள். முயற்சி திருவினை யாக்கும். முயலுங்கள் முடியாததில்லை.


மீனம்

எண்ணியபடி எல்லாமே நல்லபடியாக நடக்கும். தொழில் மற்றும் வியாபார முன்னேற்றத்துக்காக முக்கிய நபர்களின் சந்திப்பு இனியதாக அமையும். பெண்களால் நன்மை உண்டாகும்.


Post a Comment

0 Comments

Ad Code

close