Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான‌ இராசி பலன்கள்

  "இன்றைய நாளுக்கான‌ இராசி பலன்கள்"




மேஷம்

தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிறர் விவகாரங்களில் தலையிடாது இருப்பது நல்லது.


ரிஷபம்

உங்கள் செயல் வேகம் காரணமாக சம்பாத்திய நிலை உயரும். கடினமான செயல்களைக் கூட எளிதாக, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.


மிதுனம்

உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்குக் கடின உழைப்பு தேவை.


கடகம்

தனலாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.


சிம்மம்

மனசாட்சிக்கு மாறாக நடக்க மாட்டீர்கள். மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தனலாபம் ஏற்படும்.


கன்னி

புனிதப் பயணங்கள், கோவில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு இருந்தாலும் உதவிகள் தாமதப்படும்.


துலாம்

இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.


தனுசு

வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.


விருச்சிகம்

பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.


மகரம்

திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். விற்பனை அதிகரிக்கக் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.


கும்பம்

தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.

மீனம்

மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள். தன்னம்பிக்கை கூடும்.

Post a Comment

0 Comments

Ad Code

close