"இன்றைய நாளுக்கான இராசி பலன்கள் "
மேஷம்
உங்கள் இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். வியாபாரிகளுக்குப் பேச்சே மூலதனமாகும். அரசால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
பெண்களால் பண விரயமாகும். கோபத்தைக் குறைப்பது நல்லது. திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும். வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும்.
மிதுனம்
வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெற்று எல்லா வகையிலும் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும். பெண்களால் லாபம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு.
கடகம்
தனலாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் புதிய உற்சாகங்கள் பிறக்கும். தொழில் விரிவாக்கத்துக்கு அரசு ஆதரவும், அதிகாரிகளால் அனுகூலமும் ஏற்படும்.
சிம்மம்
தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்பட்டு பெண்ணால் குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
கன்னி
அரசிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். வேண்டாத விவகாரங்களால் மனக்கவலை ஏற்படலாம். மனைவியால் குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையலாம்.
துலாம்
வாகன, போஜன சுகங்கள் கூடி, அவருக்கு என்னையா பெரிய ஆள் எனப் பெயர் பெறுவீர்கள். காதல் வலையில் விழ நேரலாம். மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
தனுசு
உங்கள் செயல்களில் வெற்றி பெற மிகுந்த அக்கறை எடுக்க நேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
விருச்சிகம்
இளமைக் கால இனிய நண்பரைச் சந்திந்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். எதிர்பார்த்த இடங்களில், இருந்து எதிர்பார்த்த தனவரவு உண்டாகும்.
மகரம்
வாகன சுகம் குறையும். தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கவேண்டிய நாள். நன்கு பழகிய நண்பர்களே மோசம் செய்வர் எனவே, எவரிடமும் எச்சரிக்கையாக இருக்கவும்.
கும்பம்
புதிய வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். பணவரவு உண்டு. தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத் தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்.
மீனம்
குடும்பத்தில் ஒற்றுமை குறைவால் குழப்பங்கள் நிலவும். வீட்டில் எல்லா வகையிலும் மகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி