Ticker

6/recent/ticker-posts

Ad Code

தண்டனைக்கு உள்ளாகப்போகும் அரச ஊழியர்கள்




அரச ஊழியர்கள் தமது கடமை நேரத்தில் Facebook, WhatsApp போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டு உள்ளது. 


குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மு.ப.7.30- பி.ப.1.30 வரை (முஸ்லிம் பாடசாலைகள் எனில் பி.ப 2.00) முகநூலில் பதிவேற்றம் செய்தல், like, comments, chatting , share செய்தல் கூடாது.


உங்களது எதிராளி ஒருவர்,அதனை screen shot எடுத்து, ஆதாரத்துடன் மாகாணக் கல்விப் பணிப்பாளர்/கல்வி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தால், ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

அதேபோல் பாடசாலை ஆசிரியர்/அதிபர் ஒருவர் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர்/நிரல் கல்வி அமைச்சின் செயலாளரின் முன் அனுமதி பெறாமல், பாடசாலை நிகழ்வுகளை தனிப்பட்ட முகநூல் பக்கத்தில்/WhatsApp இல் பதிவேற்றம் செய்ய முடியாது.

ஆனால் பாடசாலையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், முகநூல் பக்கம் மற்றும் WhatsApp குழுவின் Admin. க்கான முன் அனுமதியை வலயக் கல்விப் பணிப்பாளர்/மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் பெற்றுக் கொண்ட பின், பாடசாலை தொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய முடியும்.

இந்த நிபந்தனைகளை கடைப்பிடிக்காத அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.


Post a Comment

0 Comments

Ad Code

close