"மரக்கறி விலைகளில் ஏற்பட்ட சடுதியான ஏற்றம்"
நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.
இதனால் , நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும்,
ஒரு கிலோ கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையிலும்,
ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவரை, முட்டைக்கோஸ், தக்காளி போன்ற மரகறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் அந்த காய்கறிகளின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும்,
காய்கறி உற்பத்தி குறைவதால் விலைகள் மேலும் உயரலாம் எனவும் பொருளாதார மத்திய நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி