"அதிகரிக்கப்பட்டது விபத்துக்கான இழப்பீட்டுத் தொகை"
இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்கள், மற்றும் ரயில்களில் பயணிக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 5 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து தவறி வீழந்து உயிரிழந்த சம்பவம் மற்றும் செப்டம்பர் 6ஆம் திகதி கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் பஸ் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பயணிகள் உயிரிழந்தமை ஆகிய இரு சம்பவங்களை அடிப்படையாக கொண்டு குறித்த யோசனையை போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு அமைச்சரவையில் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி