Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்



மேஷம்

கல்வியில் உங்கள் திறமைகளை காட்டினாலும் தடைகள் ஏற்படும். கௌரவ குறைச்சல் ஏற்படும். வீண் பேச்சுக்கள் மற்றும் பெண்கள் மூலம் குழப்பங்கள் ஏற்படலாம்.


ரிஷபம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.


மிதுனம்

அதிக வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.


கடகம்

நம்பத் தகுந்த அநேக நண்பர்களின் நட்பு கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சிம்மம்

இன்று உங்கள் மனதில் அமைதி நிலவும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். பிறரை அதிகாரம் செய்யும் பதவி உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் பல வழிகளில் ஆதாயம் பெருகும்.


கன்னி

தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டி பரிசுகளைப் பெறுவீர்கள். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.

துலாம்

குடும்பத்தாரிடம் மனைவி செய்யும் குழப்பங்களால் வீட்டில் நிம்மதி குறையும். அடக்கமாகப் பணிபுரிந்தால் மட்டுமே அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்.


தனுசு

உல்லாசமான ஊர் பயணங்கள் மகிழ்ச்சி அளிக்கும். முக்கிய காரியங்கள் கை கொடுப்பர் நண்பர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய பெண்களின் நட்பு மகிழ்ச்சி தரும்.


விருச்சிகம்

பொருளாதார நிலை உயர்ந்து பெரிய மனிதன் என்ற பெயர் நிலவும். பேச்சின் இனிமை கண்டு பெண்கள் மயங்குவர். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் அனுகூலம் இருக்கும்.

மகரம்

தொழில் அல்லது வியாபார மாற்றங்கள் ஏற்படலாம். பொதுச் சேவை ஈடுபாடு ஏற்படும். பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

கும்பம்

பணி மாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கெடுபிடி இருக்கும். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.


மீனம்

அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை சீராக உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட தூர அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.


Post a Comment

0 Comments

Ad Code

close