தற்போதைய நிலையை பொறுத்த மட்டில் மின்சாரக் கட்டணத்தை 22 வீதத்தால் அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கான செலவுக்காக திறைசேரியிலிருந்து நிதி கிடைக்காமை மற்றும் வங்கிகளில் இருந்து கடன்கள் கிடைக்காததால் மின் கட்டணத்தை அதிகரிப்பதே மின்சார சபையின் செலவை ஈடுசெய்ய ஒரேவழி என்று மின்சார சபை வலியுறுத்துகிறது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை கோரியுள்ள மின் கட்டணத்தை 22 வீதம் அதிகரிக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு பிரிவின் அலகு விலையும் எட்டு ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரியதையடுத்து, கடந்த மூன்று மாதங்களுக்கான சபையின் வருமான அறிக்கைகளை ஒப்பிட்டு பார்க்கையில், இலங்கை மின்சார சபையின் வருமானம் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 4573 மில்லியன் ரூபாவால் குறைந்துள்ளது.
இதன்படி, ஜூலை மாதத்தில் மின்சார சபையின் வருமானம் 55ஆயிரத்து 163 மில்லியன் ரூபாவாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் வருமானம் 53 ஆயிரத்து 193 மில்லியன் ரூபாவாகவும் செப்டம்பர் மாதத்திற்குள் 50 ஆயிரத்து 590 மில்லியன் ரூபாவாகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி