Ticker

6/recent/ticker-posts

Ad Code

தொடரும் சிறுவர்களின் தற்கொலைகள்



 'எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் எடுத்த முடிவு. எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை'.

 என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கிளிநொச்சி பெரியபரந்தனில் வசித்த  சிறுமிகள்  இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சம்பவம் நேற்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இடம் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.


 சுரேஸ்குமார் தனிகை, மற்றும் லோகேஸ்வரன் தமிழினி ஆகிய இரண்டு சிறுமிகளே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச்சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்


 இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் தோற்றி பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

close