" பரீட்சை பெறுபேறுகள் "
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை கடந்த மே மாதம் நடைபெற்றிருந்த நிலையில்,
பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போது GCE OL பரீட்சை பெறுபேறுகளை கணினிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு,புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் பரீட்சை நடைபெற்ற தினத்தில் இருந்து 45 நாட்களுக்குள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதுவும் நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப் படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி