பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கான அபராதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணி ஒருவர் 3000 ரூபா அபராதத்தையும், பயண கட்டணத்தின் இரண்டு மடங்கையும் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணம் செலுத்தாது பயணிக்கும் பயணிகளினால் நாள் ஒன்றுக்கு 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அபராத தொகையை அதிகரிப்பது குறித்த சட்ட வரைவுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு முதல் இந்த அபராத தொகை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையில் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் பயணச்சீட்டு எடுக்காது பயணம் செய்வோருக்கு தற்பொழுது 250 ரூபா அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி