மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் அனுஷ்கா சமிலாவினட ஆலோசனைக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை புனித ஜோசப் பெண்கள் கனிஷ்ட கல்லூரியின் இரண்டு மாடிக் கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி நிலவும் கடும் மழை காரணமாக இடிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்காணிப்புக்குப் பிறகு, அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாடசாலையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி