Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்





மேஷம்

எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். தொழிலில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.. நண்பர்கள் சந்திப்பு மூலம் நல் முன்னேற்றங்கள் ஏற்படும்.


ரிஷபம்

இடமாற்றங்கள் ஏற்படலாம். பெண்களால் ஏற்படும் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் பணமுடை ஏற்படும். கோபத்தைக் குறைத்தால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.


மிதுனம்

பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.


கடகம்

வாழ்க்கையில் சந்தோஷம் அனுபவங்கள் கூடும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.


சிம்மம்

தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.


கன்னி

மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. மனைவியின் வாய்த்துடுக்கால் மற்றவர்களுடன் பகை ஏற்படும்.


துலாம்

ஆரோக்கிய நிலை மேம்படும். தொழில் புரிபவர்களுக்கு பேச்சே மூலதனமாய் அமையும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும். சிலர் காதல் வயப்பட நேரும்.


தனுசு

செயல்பாடுகள் அனைத்திலும் தொய்வு உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படலாம்.


விருச்சிகம்

எதிரிகளின் செயல்பாடுகள் அனைத்தும் முறியடிக்கப்படும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்களால் தனவரவு கூடும். விரும்பிய அனைத்தும் கிடைத்து மகிழ்ச்சி மிகும்.


மகரம்

தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும்.


கும்பம்

தைரியம் கூடும். மனதில் தெம்பும், தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.


மீனம்

மனைவி, குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவு மருத்துவச் செலவை தரும். எடுத்த காரியங்கள் தோல்வி அடைவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வியே வெற்றிக்கு முதல் படி ஆகும்.

Post a Comment

0 Comments

Ad Code

close