மேல் மாகாணத்தில் 4,000 ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நேர்முகப் பரீட்சையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேல் மாகாணத்தில் தற்போது 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
ஆங்கிலம், தமிழ் மொழி பாடங்களை கற்பிப்பதற்காக ஆசிரியர்கள் இல்லாத பிரச்சினை காணப்படுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி