தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனத்தை சீமான் தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய நினைவேந்தல் ஊர்திமீதும் அதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் ஒன்றை திருகோணமலை கப்பற்துறையருகே சிங்களக் காடையர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் கொலைவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளானர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான தனது கண்டனத்தை அறிக்கையுடாக தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தாயகத்தில் திருகோணமலை கப்பல் துறையில் தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திமீதும் அதில் பயணித்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் 50 இற்கும் மேற்ப்பட்டவர்களால் தாக்குதல் நடத்தியமை கண்டத்திற்குரியது.
தமிழ் மக்களின் சனநாயக பிரதிகளின் மீதான வன்முறை தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன்? இது தான் இந்தியா தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக்கொள்ளும் முறையா? எனவும் அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி