Ticker

6/recent/ticker-posts

Ad Code

மாணவி தூக்கிட்டு தற்கொலை




யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை


யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்

ஆங்கிலத்தில் கற்பித்த பாடத்தை

புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டதால்

கவலையடைந்த மாணவி ஒருவர் உயிரை

மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த மாணவி ஆங்கில மொழிப்

பிரச்சினையால் மன உளைச்சலுக்கு

ஆளானதாக உயிரிழந்த மாணவியின்

தாயார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த

வசந்தகுமார் டீலக்ஸி என்ற குறித்த பெண்,

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி

கற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (17) மதியம் அவர் தனது வீட்டில்

தூக்கில் தொங்கிய நிலையில்

இருந்ததனை, அவரது சகோதரர்

பார்த்துள்ளார்.

உடனடியாக பிரதேசவாசிகள் அவரை

கிளிநொச்சி வைத்தியசாலையில்

அனுமதித்த போதும், அவர் ஏற்கனவே

உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை

வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்

விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்

Post a Comment

0 Comments

Ad Code

close