அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆர்எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
எரிபொருட்களை இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கும் , விற்பனை செய்வதற்கும் அந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் , 20 வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது .
விநியோகத்தைத் ஆரம்பித்த சீனாவின் சினோபெக் நிறுவனம் இரண்டு பிரதேசங்களில் தற்போது விநியோகத்தை முன்னெடுத்துள்ளது .
சினோபெக் தற்போது அனைத்து வகையான எரிபொருளையும் தமது போட்டியாளர்களைவிட 3 ரூபா குறைவாக வழங்குகிறது .
இந்தநிலையில் , ஆர்.எம்.பார்க்ஸ் நிறுவனத்துக்கும் அதன் எரிபொருளை உள்ளுர் சந்தையில் உள்ள விலையை விடவும் குறைந்த விலையில் வழங்க வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் .
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி