தங்கொவிட்ட ஹெந்தல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருதுவத்த, தங்கொவிட்ட பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மண்மேட்டை வெட்டிக் கொண்டிருந்த போது சுமார் 15 அடி உயரத்தில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்து அதற்கு அடியில் புதையுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தங்கொவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி