Ticker

6/recent/ticker-posts

Ad Code

கூறிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை

 




கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 


குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.


சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

close