Ticker

6/recent/ticker-posts

Ad Code

அதிகரிக்கப்பட்டது மின்சார கட்டணம்




இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை சேர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.


எனவே ,இம்மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும், அடுத்த மாதம் வாடிக்கையாளர் பெறும் மின் கட்டண பட்டியலில் புதிய வரியும் உள்ளடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.


மின்சார சபையால் வழங்கப்படும் மின்சார கட்டண பட்டியல்களில் குறித்த வரி இதற்கு முன்னர் இருந்தே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் இல் காணப்பட்ட குறைப்பாடு காரணமாக, அது லெகோ மின்சார பட்டியல்களில் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.


 

Post a Comment

0 Comments

Ad Code

close