ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படம் இந்தி மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக லியோ படத்தின் ஒவ்வொரு மொழி போஸ்டரையும் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் இன்றும் ஒரு போஸ்டர் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம், லியோ திரைப்படம் குறிப்பிட்ட மொழியில் வெளிவராது என்ற தகவல்தான் அது.
அக்டோபர் 19ஆம் தேதி உலகளவில் லியோ படம் வெளிவரும் என அறிவித்துள்ள நிலையில், ஹிந்தியில் முக்கியமான மூன்று மல்டிபிளக்ஸ்- திரையரங்குகள் லியோ படத்தை திரையிடமாட்டோம் என முடிவு செய்துள்ளார்களாம்.
லியோ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. ஒரு படம் வெளிவந்து 8 வாரங்களுக்கு பின் தான் ஓடிடி-ல் வெளியிடுவோம் என நெட்பிளிக்ஸ் கூறியுள்ள நிலையில், லியோ படத்தின் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 4 வாரங்களில் ஓடிடி-ல் வெளியிடுவோம் என்று நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியான முக்கிய மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் லியோ படத்தை எங்களுடைய மல்டிபிளக்ஸ்-ல் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்களிலும் அதிக தியேட்டர்கள் உள்ளன. இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகாவிட்டால் இந்தியில் லியோவின் வசூல் அடிவாங்கும் என்கின்றனர். இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள்.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ திரைப்படம் இந்தி மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக லியோ படத்தின் ஒவ்வொரு மொழி போஸ்டரையும் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் இன்றும் ஒரு போஸ்டர் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில் லியோ திரைப்படம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம், லியோ திரைப்படம் குறிப்பிட்ட மொழியில் வெளிவராது என்ற தகவல்தான் அது.
.
இதனால் அதிருப்தியான முக்கிய மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் லியோ படத்தை எங்களுடைய மல்டிபிளக்ஸ்-ல் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று மல்டிபிளக்ஸ் நிறுவனங்களிலும் அதிக தியேட்டர்கள் உள்ளன.
இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் லியோ படம் வெளியாகாவிட்டால் இந்தியில் லியோவின் வசூல் அடிவாங்கும் என்கின்றனர். இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி