இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனுக்காக நாட்டில் சட்டம் ஒன்று திருத்தப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 800 என்னும் திரைப்படத்தை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபன சட்டத்தின்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் தமிழ் திரைப்படங்களை சிங்கள மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
இருப்பினும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனுக்கு நன்றி பாராட்டும் வகையில் இந்த சட்ட திருத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், இந்த திரைப்படத் தயாரிப்பிற்கு உள்நாட்டில் பல்வேறு பங்களிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக பந்துல தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் 800 திரைப்படத்திற்காக மட்டுமே மாற்றப்படுவதாகவும் பின்னர் மீண்டும் அந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி