Ticker

6/recent/ticker-posts

Ad Code

பாதையில் தோன்றிய குழி குழிக்குள் விழுந்த தந்தையும் மகளும் மயிரிழையில் தப்பினர்

கொத்தடுவை IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் இன்று (19) காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்கள் சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும்,  தந்தையும் மகளும் தற்போது மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் குழியில் தவறி விழுந்ததில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பின்னர், தந்தை மகளை குழியில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள் அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.

இதேவேளை, குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய குழாய் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் தெரிவிக்கையில், உள்ளே எத்தனை பேர் இருக்கிறார்கள் என தெரியவில்லை. காலையில்தானே தெரியும். அப்போது அதிகாலையில் சென்றவர்களின் நிலை.

Post a Comment

0 Comments

Ad Code

close