பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர், அவரின் அறையின் குளியலறையில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி