இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைத்துவம் குறித்த பல்வேறு தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலகக் கிண்ணம் செல்லும் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் மாற்றம் இருக்காது என புதிய கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடம் உலகக் கிண்ணத்திற்கு செல்லும் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு தசுன் ஷானக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி