கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்புகொட பகுதியில் நீரில் மூழ்கி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உல்வள, கம்புறுபிட்டிய பகுதியில் கல்விகற்கும் 13 வயதான மாணவி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி ஹொக்கி பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் 9 மாணவர்களுடன் கிரம்பஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போதே இந்த அனர்த்தத்தை அவர் எதிர்நோக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கம்புறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி