Ticker

6/recent/ticker-posts

Ad Code

இன்றைய நாளுக்கான இராசி பலன்கள்

 *🕉️ இன்றைய நாளுக்கான‌ இராசி பலன்கள் பகுதியில்...!*




மேஷம்

வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகள் ஆணைகளை தவறாது ஏற்று நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனதில் எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றம் தரும்.

ரிஷபம்

இனிய பேச்சாலும், சாதுர்யத்தால், காரியங்கள் யாவற்றிலும். வெற்றி அடைவது, அனைவரையும் கவர்வீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள், பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.


மிதுனம்

பயணத்தில் சுகானுபவங்கள் ஏற்படும். நண்பர்களின் உதவி நாட மறுக்காது உதவி செய்வார். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.


கடகம்

பெண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையுடன் நிதானமாக செயல்படுங்கள். எல்லாவிதத்திலும் செலவுகள் கூடும்.


சிம்மம்

எடுத்த காரியங்கள் அனைத்தும் ஏனோ தானோ என முடிக்கும் சூழ்நிலை உருவாகும். இயலாமை காரணமாக இல்லத்தில் உள்ளவர்கள் மீது ஏற்படும் எரிச்சலை குறைத்தால், இரத்த அழுத்தம் எகிராது.


கன்னி

மனையாளின் ஒத்துழைப்பு மட்டற்ற மகிழ்ச்சி தரும். தனவரவு கூடும். புதிய நண்பர்கள் சேர்க்கையால், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எண்ணிய எண்ணியாங்கு நடக்கும்.


துலாம்

வீட்டிலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கறையுடன் படித்தால், கல்வித் தடைகளைத் தகர்க்கலாம். பயணங்களில் கவனம் தேவை.


தனுசு

எதிர்பாராத விதமாக வேறு இடத்திற்கு பணிமாற்றம் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால், கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். உண்ணவும் நேரமின்றி உழைக்க நேரிடும்.


விருச்சிகம்

சீராக, நாகரீகமாக, மிடுக்கான உடை உடுத்தி, மற்றவர்களை கவரும் வண்ணம் நடந்துகொள்வீர்கள். உங்கள் தேஜஸ் கூடும். தேவைக்கு அதிகமாகவே தனவரவு உண்டாகும்.


மகரம்

உங்கள் மதிப்பு மரியாதை கூடும். விருப்பங்கள் யாவும் நிறைவேறும். அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதரவால் முன்னேற்றம் கிடைக்கும். நம்பிக்கைக்கு உரியவர்கள் நட்பு கிடைக்கும்.


கும்பம்

சீரான வருமானத்தால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.


மீனம்

தொழில் பயணங்களால் வெற்றி கிட்டும். ஆராய்ச்சி மேற்கொள்ளும் எண்ணம் எழும். வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளர்களின் ஆதரவால் இலாபம் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments

Ad Code

close