லங்கா சதொச நிறுவனத்தால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் பின்வரும் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த விலை குறைப்பு இன்று (20) முதல் அமுலுக்கு வருகிறது.
ஒரு கிலோ கிராம் சோயா மீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 580 ரூபாவாகும்.
உள்ளூர் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 290 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் நெத்தலி 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,100 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் வௌ்ளை பூண்டு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 620 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் வெங்காயம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாவாகும்.
சிவப்பு பருப்பு ஒரு கிலோ கிராம் 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 299 ரூபாவாகும்
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி