கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடாத்துவதற்கான திகதிகள் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை உயர்தரப் பரீட்சைக்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ள திகதிகள் திருத்தப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
எமது வலைத்தளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட்டமைக்கு நன்றி